கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம் நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம் விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம் அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே கட்டளைக் கலித்துறை