கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக் காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும் இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி எமைப்பு ரந்தசண் முகசிவ சிவவோம் இறைவ சங்கர அரகர எனவே அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே