கயவு செய்மத கரிஎனச் செருக்கும் கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என் உயிர் தரித்திடா துன்அடி ஆணை தயவு செய்தருள் வாய்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- திருவருட் பேறு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்