கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக் குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார் உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே