கரண வாதனை யால்மிக மயங்கிக் கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன் மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர் இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே