கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர் உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன் உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன் புரத்தைக் காட்டு நகையின்எ ரித்தோர் புண்ணி யற்குப் புகல்குரு நாதனே வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ