கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் திரப்படும் கருணைச் செல்வமே சிவமே தெய்வமே தெய்வநா யாகமே உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும்என் உவப்பே