கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள் இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள் வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும் விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள் மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே