கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய் கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப் பரவு சண்முக சிவசிவ சிவஓம் பரசு யம்புசங் கரசம்பு நமஓம் அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே
கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே