கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கனமிருந் ததுதான் வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன் பெருங்கணம் சூழ வடவளத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர் மருங்கன வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே