கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய் ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய் உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப் பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும் பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே