Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3605
கருணா நிதியே என்இரண்டு 

கண்ணே கண்ணிற் கலந்தொளிரும் 
தெருணா டொளியே வெளியேமெய்ச் 

சிவமே சித்த சிகாமணியே 
இருணா டுலகில் அறிவின்றி 

இருக்கத் தரியேன் இதுதருணம் 
தருணா அடியேற் கருட்சோதி 

தருவாய் என்முன் வருவாயே
பாடல் எண் :3613
கருணா நிதியே அபயம் அபயம் 

கனகா கரனே அபயம் அபயம் 
அருணா டகனே அபயம் அபயம் 

அழகா அமலா அபயம் அபயம் 
தருணா தவனே அபயம் அபயம் 

தனிநா யகனே அபயம் அபயம் 
தெருணா டுறுவாய் அபயம் அபயம் 

திருவம் பலவா அபயம் அபயம்
பாடல் எண் :4986
கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே 
காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே 
அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே 
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே  எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5117
கருணா நிதியே குணநிதி யே 
கதிமா நிதியே கலாநிதி யே
பாடல் எண் :5119
கருணா நிதியே சபாபதி யே 
கதிமா நிதியே பசுபதி யே
பாடல் எண் :5281
கருணா நிதியர்என்று ஊதூது சங்கே 

கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே 
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே 

அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே
பாடல் எண் :5327
கருணா நிதியே அபயம் கனிந்த 
அருணா டகனே அபயம் - மருணாடும் 
உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப் 
பொள்ளற் பிழைகள் பொறுத்து   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.