பாடல் எண் :3774
கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே
பாடல் எண் :4625
கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
அருள்நன் னிலையில்() அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே
() நிலையின் - பி இரா பதிப்பு
பாடல் எண் :5418
கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.