கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர் கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர் அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர் அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர் தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர் சத்தியரே நித்தியரே அணையவா ரீர் இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்