கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே