கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம் மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும் பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம் தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்