கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட் சிவமே தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே