கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத் தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும் ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்