கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார் மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால் பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே