கருதென அடியார் காட்டியும் தேறாக் கன்மனக் குரங்கனேன் உதவா எருதென நின்றேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் மருதிடை நின்ற மாணிக்க மணியே வன்பவம் தீர்ந்திடும் மருந்தே ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும்என் உறவே