கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த கணவனே கணவனே என்கோ ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே ஒருதனிப் பெரியனே என்கோ திருத்தனே எனது செல்வமே எல்லாம் செயவல்ல சித்தனே என்கோ நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ நிறைஅருட் சோதிநின் றனையே