கருத்தனை எனது கண்அனை யவனைக் கருணையா ரமுதெனக் களித்த ஒருத்தனை என்னை உடையநா யகனை உண்மைவே தாகம முடியின் அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற் றம்பலத் தருள்நடம் புரியும் நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனைக் கண்டுகொண் டேனே