கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப் பெருங்கருணைக் கடலை வேதத் திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத் தெள்ளமுதத் தெளிவை வானில் ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை உயிர்க்குணர்வை உணர்த்த னாதி அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ