கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும் கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான் தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது சார்பின்அருட் பெருஞ்ஸோதி தழைத்துமிக விளங்கும் திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான் திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல் வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே