கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின் றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம் அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்