கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள் கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன் இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர் இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம் அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே