கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர் பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
கரும்பி லினிக்கு மருந்து - கடுங் கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து இரும்பைக் குழைக்கு மருந்து - பே ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து நல்ல