கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும் காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர் விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன் மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன் துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர் தூயநும் பேரருட் சோதிகண் டல்லால் அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே