கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர் கண்ணனையீர் கனகசபை கருதியசிற் சபைமுன் துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன் துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம் விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன் பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள் பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே