கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார் திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில் பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே