Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4626
கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன் 

கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன் 
உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன் 

உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே 
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான 

சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம் 
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே 

வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.