கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர் குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே