கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக் குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத் திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே