கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர் கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர் உரைக்கண வாத உயர்வுடை யீர்என் உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர் வரைக்கண எண்குண மாநிதி ஆனீர் வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால் அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே