கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத் திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன் அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே