கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித் திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே