கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு விரைபடா மலர்போல் இருந்துசுழல் கின்றேன் வெற்றனேன் என்செய விரைகேள் திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே