பாடல் எண் :3664
கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே
கடல்முதலி லேகடல் திரையிலே நுரையி கடல்ஓசை அதன்நடுவிலே
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட வடிவிலே வண்ணம்அதிலே
மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள் வயங்கிஅவை காக்கும் ஒளியே
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே புகுந்தறி வளித்தபொருளே
பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத் திடாதபொன்னே
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே மறுப்பிலா தருள்வள்ளலே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.