கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே சிற்கரை திரையறு திருவருட் கடலே தெள்ளமு தேகனி யேசெழும் பாகே சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே தனிநட ராசஎன் சற்குரு மணியே