கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன் நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன் சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும் திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே