கற்பங்கள் பலகோடி செல்லத் தீய கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப் பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப் புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம் சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத் திருவாளர் உட்கலந்த தேவ தேவே