கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா அருள்நிலை தனில்உற அருளிய அமுதே பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனிநட ராசஎன் சற்குரு மணியே