கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன் அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன் நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே