கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ கால்ஊன்றி மயங்குகின்ற கடையே னேனைச் சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம் துணவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான ஆனந்த போகம்உற அருளல் வேண்டும் சிற்பரசற் குருவாய்வத் தென்னை முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே