கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின் கருணைஅம் கழல்அடிக் கன்பாம் பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன் அடியர்பால் சேத்திடில் உய்வேன் தற்பரா பரமே சற்குண மலையே தணிகைவாழ் சரவண பவனே