கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல கண்டம்என் றுன்திரு முன்னர் சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால் செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா தேவஓம் அரகர எனும்சொல் சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே