கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும் கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில் மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன் அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய் அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே