கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன் கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும் இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ பெற்றவளைக் காணாத பிள்ளை போலப் பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி இற்றவளைக்() கேள்விடல்போல் விடுதி யேல்யான் என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே