கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும் உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச் சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ