கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப் பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே